மணல் குவாரியை திறக்கக்கோரி பேரணி: தா.பழூர் கூட்டத்தில் தீர்மானம்

மணல் குவாரியை திறக்கக்கோரி பேரணி: தா.பழூர் கூட்டத்தில் தீர்மானம்
X

தா.பழூரில் நடைபெற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம். 

மணல் குவாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, தா.பழூரில் நடந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஆலோசகர் சங்கர், கிளை செயலாளர் செல்வம், மாவட்ட நிர்வாகிகள் அம்பலவாணன், செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஜெயபால், தஞ்சை மாவட்ட தலைவர் கோவிந்தராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில், மாநிலம் முழுவதும் மணல் குவாரி திறக்கக்கோரி, மாநிலம் தழுவிய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சென்னை கோட்டையை நோக்கி, 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக செல்வது எனவும், ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட பழைய, புதிய மணல் குவாரிகளை உடனே திறந்துவிட வேண்டும், மணல் குவாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காமராஜு வரவேற்றார். முடிவில் செல்வராசு நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!