அரியலூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
அரியலூர் : அரியலூர்- மாவட்டம் தா.பழூர் சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உள்ளன. இந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளி அதன் மூலம் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி திறக்கக் கோரி நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அடிக்கடி இவர்கள் மாட்டுவண்டியில் திருட்டுத்தனமாக மணல் எடுத்து செல்லும்போது ரோந்து வரும் போலிசார் வழக்குபதிவு செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்வதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்படுகிறது.
மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நிரந்தரமாக மணல் குவாரி திறக்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மாட்டுவண்டிகளை நிறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெயங்கொண்டம்- சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலிசார் மாட்டுவண்டிகளை சாலைகளில் ஓரத்தில் நிறுத்தசொல்லி போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் அரசு வழங்கும் வீடுகள் கட்ட அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி அளித்தால் சிரமம் இன்றி வீடுகளுக்கு மணல் கொடுத்து கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்துடன் வாழ முடியும். இதற்க்காக பல முறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
எனவே மாட்டு வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிரந்தரமாக மணல் குவாரி திறக்கக்க வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu