கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல்

கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல்
X
கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளிலிருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிகளுக்கு மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அரங்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தனர். அப்பொழுது மாட்டு வண்டியை ஓட்டி வந்த அந்த நபர் சாலையின் ஓரமாக மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

பின்பு போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளிலிருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. பின்பு மாட்டு வண்டியை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!