ஆண்டிமடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஓ.என்.ஜி.சி. சார்பில் தூய்மைப் பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மருதமுத்து வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் பணியாற்றும் கிராமப் புற தூய்மைப் பணியாளர்களுக்கு காரைக்கால் ஓ.என்.ஜி.சி. (எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம்) சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். மேலாளர்கள் முருகானந்தம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் முதன்மை மேலாளர் சாய்பிரசாத், மனித வள மேம்பாட்டுத் துறை அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு 200 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி, அவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினர். ரோஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஜான் திருநாவுக்கரசு கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு குறிப்பு எடுத்துரைத்தார். முன்னதாக வழக்கறிஞர் ஜெயராஜ் வரவேற்றார். முடிவில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் மாரியப்பன் நன்றி தெரிவித்தார்.
இதேபோல் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி தலைமை வகித்தார். மேலாளர் அழகானந்தம், கவுன்சிலர் பத்மநாதன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். ஒன்றிய குழுத் தலைவர் மருதமுத்து கலந்து கொண்டு 150 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu