10 அடி குழியில் தவறி விழுந்த எருமை மாடு பத்திரமாக மீட்பு

10 அடி குழியில் தவறி விழுந்த எருமை மாடு பத்திரமாக மீட்பு
X

மீட்கப்பட்ட எருமை மாட்டுடன் தீயணைப்பு படையினர்.

கட்சி பெருமாள் கிராமத்தில் 10அடி ஆழ குழியில் தவறி விழுந்த எருமை மாடு பத்திரமாக மீட்டு ஒப்படைத்த தீயணைப்புத் துறையினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கட்சி பெருமாள் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடு ஒன்று நேற்று நள்ளிரவில் 10 ஆடி ஆழக் குழிக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. பின்னர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாட்டை காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதுபற்றி ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் குழிக்குள் தவறி விழுந்த எருமை மாட்டை கயிறு மூலம் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மாட்டினை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

குழிக்குள் தவறி விழுந்த எருமை மாட்டை மீட்ட ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறை அலுவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!