உடையார்பாளையம் அருகே திருவிழா நடந்து வரும் நிலையில் கோவிலுக்கு பூட்டு

உடையார்பாளையம் அருகே திருவிழா நடந்து வரும் நிலையில் கோவிலுக்கு பூட்டு
X

உடையார் பாளையம் அருகே தத்தனூர் மாரியம்மனுக்கு கோவில் பூட்டப்பட்டுள்ளது.

உடையார்பாளையம் அருகே மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆர்டிஓ உத்தரவின்படி பூட்டப்பட்டது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொட்ட கொல்லை தத்தனூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் 16 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வகையறாக்களுக்கு பதினோரு வருடங்களாக சாமி கும்பிடுவதில் பிரச்சனை இருந்து வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


சுமூகமாக சாமி கும்பிட அறிவுறுத்தி இருந்த நிலையில், கோவில் திறக்கப்படாததை முன்னிட்டு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் உத்தரவின் பேரில் தாசில்தார் ஸ்ரீதர் கோவிலை பூட்டினார். இதனையடுத்து கோவில் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.

அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!