சாலையோரம் பூங்கா திட்டம்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சாலையோரம் பூங்கா திட்டம்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ  தொடங்கி வைத்தார்
X

சாலையோர பூங்கா திட்டத்தை, மரக்கன்று நட்டு, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் சின்னவளையம் கிராமத்தில், சாலையோரப்பூங்கா திட்டப்பணியை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னவளையம் கிராமத்தில், அரங்கன் ஏரியை சுற்றி சாலையோரம் பூங்கா அமைக்க நகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலையோர பூங்காவில், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஜெயங்கொண்டம் ராயல் சென்டெனயல் லயன்ஸ் சங்கம் மரக்கன்றுகளை வளர்க்க முன்வந்துள்ளது.

இதனையடுத்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வ.சுபாஷினி, நகராட்சி பொறியாளர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story