அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு ராஜேந்திரசோழன் பெயர் சூட்ட கோரிக்கை

அரியலூர் மருத்துவக்கல்லூரிக்கு  ராஜேந்திரசோழன் பெயர் சூட்ட கோரிக்கை
X

ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம் 

அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயர் சூட்ட ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய குழுத் தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் லதா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அரியலூரில் விரைவில் திறக்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உறுப்பினர் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்