ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு
X

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட சண்முகம் என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கடாரங்கொண்டான் கிராமத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெரிய ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட சண்முகம் என்பவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த காவல் துறையினர் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்துகொண்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தமிழகஅரசிடமும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!