/* */

ராஜேந்திரசோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை

ஆகஸ்ட் 5ம் தேதி ஆடிமாத திருவாதிரை நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அரசிற்கு கோரிக்கை

HIGHLIGHTS

ராஜேந்திரசோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
X

கங்கைகொண்ட சோழபுர பெருவுடையார் கோவில்.


அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக நிர்மானித்து சுமார் 267ஆண்டுகள் தெற்காசியாவை ஒருகுடையின் கீழ் கட்டியாள வழிவகுத்த சோழமாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை கங்கைகொண்ட சோழபுரம் கிராமமக்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், வரலாற்று பொக்கிசமாக, கட்டிடக்கலைக்கு சான்றாக, யுனெஸ்கோவின் புராதான சின்னமாக விளங்கி வருகிறது பெருவுடையார் கோவில். இக்கோவிலை நிர்மானித்த சோழப்பேரரசன் ராஜேந்திரசோழன் தனது தலைநகராக கங்கைகொண்ட சோழபுரத்தை அமைத்து அதன் மையத்தில் இக்கோவிலை கட்டினார். தனது படைகளை கங்கை வரை அனுப்பி, அப்பகுதி மன்னர்களை வென்று கங்கைநீரை எடுத்துவந்து கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாரை அபிஷேகம் செய்து இக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினார் ராஜேந்திரசோழர் என்பது வரலாறு. தனது ஆட்சிகாலத்தில் கங்கைவரை இந்தியாவின் பகுதிகளையும், கடாரம், ஸ்ரீவிஜயம் உள்ளிட்ட தெற்காசியாவின் பகுதிகளையும் வென்றெடுத்த மாவீரன் என்று போற்றப்படுபவர் ராஜேந்திரசோழன்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே. தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர். அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாட்டை, பத்தாயிரம் போர் கப்பலுடன் சென்று ராஜேந்திரசோழன் வெற்றி பெற்றார் என்பதும், மிகப்பெரிய கடற்படையை முதன்முதலில் உருவாக்கியவர் ராஜேந்திரசோழன்தான் என்பதும் வரலாற்று ஏடுகளில் உள்ளது. தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன். அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம். நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்? அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன் ராஜேந்திர சோழன். தமிழக வாணிப செட்டியார்கள், அவர் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்.

இவ்வாறு பலப்பெருமைகளை உடைய ராஜேந்திரசோழனின் பிறந்தநாளை தமிழகஅரசு அரசுவிழாவாக அறிவித்து கொண்டாடவேண்டும். அவர் எழுப்பியுள்ள காலத்தால் அழியாத கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மூன்றுநாள் நிகழ்சிகளை நடத்தி அவ்விழாவில் ராஜேந்திரசோழனின் பெருமைகளை, அவர் காலத்திய வரலாற்று ஆய்வுகளை வெளியிட வைத்தால், காலத்தால் ராஜேந்திரசோழனின் பெருமை நிலைத்து நிற்கும். இதன் மூலம் 267ஆண்டுகள் தெற்காசியாவை கட்டியாண்ட தமிழர்களின் வரலாறு போற்றி பாதுகாக்கப்படும் என்று கூறுகிறார் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தலைவர் கோமகன்.

ஆகஸ்ட் மாதம் 5ம்தேதி (நாளை) ஆடிமாத திருவாதிரை நாளை அரசு விழாவாக நடத்தப்பட வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் அரசிற்கு கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசின் சார்பாக தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜசோழனின் பிறந்தநாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்தினத்தன்று சதயவிழாவாக இரண்டு நாட்கள் அரசு விழா கொண்டாடப்படுகிறது. அதுபோன்று அவரது மகனும் சோழசாம்ராஜ்யத்தை இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் கொண்டு சென்ற ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையில் அரசுவிழா எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அன்மையில் சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசு புத்தகம் ராஜேந்திரசோழன் என்பதில் இருந்து ராஜேந்திரசோழன் பால் அன்பு கொண்டிருக்கும் தமிழகஅரசு, இக்கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று வராலாற்று ஆராயச்சியாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Updated On: 4 Aug 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...