ஜெயங்கொண்டம் அருகே ரேஷன் கடை ஊழியர் பணியின் போது உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே ரேஷன் கடை ஊழியர் பணியின் போது உயிரிழப்பு
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ரேஷன் கடை ஊழியர் பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(52). இவர், புதுச்சாவடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். பணியின் போது மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா