ரூ.200 தருவதாக கூறி சிறுமியிடம் பாலியல்: முதியவர் போக்சோவில் கைது

ரூ.200 தருவதாக கூறி சிறுமியிடம் பாலியல்: முதியவர் போக்சோவில் கைது
X

ராஜேந்திரன்

POSCO Act in Tamil -ஆண்டிமடம் அருகே 200 ரூபாய் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

POSCO Act in Tamil -அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இவர் செய்யும் செயலை பார்த்து வெளியே சொன்னால் பெரியவர்களுக்குள் சண்டை வந்து விடுமோ? என்று எண்ணி பயந்து சிறுமி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் 200 ரூபாய் பணம் தருவதாகவும் பின்பக்க வாசல் வழியாக வரும்படியும் கூறி சிறுமியை அழைத்துள்ளார்.

இதில் பயந்து போன சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான காவல்துறையினர் ராஜேந்திரனை அழைத்து விசாரணை செய்து அவர் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

60 வயது முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா