ராஜேந்திரசோழன்பிறந்த ஆடிமாத திருவாதிரை நாள்: அரசு விழாவாக அறிவிப்பு

ராஜேந்திரசோழன்பிறந்த ஆடிமாத திருவாதிரை நாள்: அரசு விழாவாக  அறிவிப்பு
X

ராஜேந்திரசோழன் பிறந்தநாளை அரசுவிழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி கங்கைகொண்ட சோழபுரம் கிராமமக்கள் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


ராஜேந்திரசோழன் பிறந்தநாளை அரசுவிழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி கிராமமக்கள் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராஜேந்திரசோழன் பிறந்தநாளை அரசுவிழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கங்கைகொண்ட சோழபுரம் கிராமமக்கள் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக நிர்மாணித்து, சுமார் 267ஆண்டுகள் தெற்காசியாவை ஒருகுடையின் கீழ் கட்டியாள வழிவகுத்த சோழமாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளை, அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கங்கைகொண்ட சோழபுரம் கிராம மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். மேலும் கோவிலின் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், வரலாற்று பொக்கிஷமாக, கட்டிடக்கலைக்கு சான்றாக, யுனெஸ்கோவின் புராதான சின்னமாக விளங்கிவருகிறது பெருவுடையார் கோவில். இக்கோவிலை நிர்மாணித்த சோழப்பேரரசன் ராஜேந்திரசோழன், தனது தலைநகராக கங்கைகொண்ட சோழபுரத்தை அமைத்து அதன் மையத்தில் இக்கோவிலை கட்டினார். தனது படைகளை கங்கைவரை அனுப்பி , அப்பகுதி மன்னர்களை வென்று, கங்கைநீரை எடுத்து வந்து கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாரை அபிஷேகம் செய்து இக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினார் ராஜேந்திரசோழர் என்பது வரலாறு. தனது ஆட்சிகாலத்தில் கங்கை வரை இந்தியாவின் பகுதிகளையும், கடாரம். ஸ்ரீவிஜயம் உள்ளிட்ட தெற்காசியாவின் பகுதிகளையும் வென்றெடுத்த மாவீரன் என்று போற்றப்படுபவர் ராஜேந்திரசோழன்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே. தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர். அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன.

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாட்டை, பத்தாயிரம் போர் கப்பலுடன் சென்று ராஜேந்திரசோழன் வெற்றி பெற்றார் என்பதும், மிகப்பெரிய கடற்படையை முதன்முதலில் உருவாக்கியவர் ராஜேந்திரசோழன்தான் என்பதும் வரலாற்று ஏடுகளில் உள்ளது. தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன். அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன் ராஜேந்திர சோழன்.தமிழக வாணிப செட்டியார்கள், அவர் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்.

இவ்வாறு பலப்பெருமைகளை உடைய ராஜேந்திரசோழனின் பிறந்தநாளை தமிழகஅரசு அரசுவிழாவாக அறிவித்து கொண்டாடவேண்டும். அவர் எழுப்பியுள்ள காலத்தால் அழியாத கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மூன்றுநாள் நிகழ்சிகளை நடத்தி அவ்விழாவில் ராஜேந்திரசோழனின் பெருமைகளை, அவர் காலத்திய வரலல்£ற்று ஆய்வுகளை வெளியிட வைத்தால், காலத்தால் ராஜேந்திரசோழனின் பெருமை நிலைத்து நிற்கும். இதன் மூலம் 267ஆண்டுகள் தெற்காசியாவை கட்டியாண்ட தமிழர்களின் வரலாறு போற்றி பாதுகாக்கப்படும் என்று கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமவினர் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜேந்திரசோழன் பிறந்த ஆடிமாத திருவாதிரை நாளை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கங்கைகொண்டசோழபுரம் கிராம மக்கள், சோழீஸ்வரர் கோவில் முன்பு கூடி வெடிவெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதற்கு உறுதுணையாக இருந்த, தொல்லியல்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக ஆடிதிருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாட முடியவில்லை என்றும், வரும் ஆண்டுகளில் அரசுவிழா மூன்று நாட்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது. வரலாற்று ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்விழாக்களின் மூலம் ராஜேந்திரசோழனின் மெய்கீர்த்திகள், போர் பயணம், வென்ற நாடுகள், வணிகம், கலாசாரம், வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை ஆகிய நிகழ்வுகளை வெளிக்கொணர முடிவதோடு, வருங்காலத் தலைமுறைக்கும் அவற்றை கொண்டு சோர்க்க முடியும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!