திடீர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

உட்கோட்டை கிராமம் வடக்கு தெருவில் மாலை வேளையில் திடீரென பெய்த மழையால் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாலைவேளையில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மழை துவங்கியது. உட்கோட்டை கிராமப்பகுதியில் சுமார் 1 மணி நேரமாக கொட்டித் தீர்த்த மழையால் தெருக்களில் சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் கணுக்கால் அளவிற்கு தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி கிடந்தது. மேலும் இந்த தண்ணீரானது அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

இதுபோல் மழைக்காலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் தேங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை சரியான முறையில் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இனிவரும் காலங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் தண்ணீர் தேங்கி வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழும் நிலை உள்ளதாகவும், இதனால் வீடுகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகையால் போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil