ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
X
ஜெயன்கொண்டம் பகுதியில் பெய்த கனமழைக்கு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
By - G.Senthilkumar, Reporter |14 July 2021 8:02 PM IST
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களில் கனமழை பெய்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று மாலை 3 மணி முதலே வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில் 6 மணிக்கு மேல் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களில் கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu