தா.பழூர் ஒன்றிய பொதுத்துறை வங்கியாளர் நடப்பு காலாண்டு ஆலோசனை கூட்டம்

தா.பழூர் ஒன்றிய பொதுத்துறை வங்கியாளர் நடப்பு காலாண்டு ஆலோசனை கூட்டம்
X
அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றிய பொதுத்துறை வங்கியாளர்களின் காலாண்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் நடப்பு காலாண்டுக்கான ஆலோசனை கூட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நடப்பு காலாண்டுக்கான கூட்டத்திற்கு முன்னோடி வங்கி மேலாளர் லயனல் பெனடிக்ட் தலைமை தாங்கினார். நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஜனனி. தா.பழூர் கால்நடை மருத்துவர் வெற்றிவடிவேலன், வேளாண் விற்பனை துறை உதவி அலுவலர் ஜோதி கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தில் பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், தாட்கோ கடன் திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் கடன் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் பல்வேறு பயனாளிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தா.பழூர் வட்டாரத்தில் இலவச கறவை மாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் 71 விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய வங்கியாளர்களிடம் அவர்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக வழங்கப்பட்டன.

விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் தொடர்புடைய பல்வேறு திட்டங்கள் குறித்தும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story