காரைக்குறிச்சி : பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் 100 மனுக்களுக்கு தீர்வு

காரைக்குறிச்சி : பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் 100 மனுக்களுக்கு தீர்வு
X

காரைக்குறிச்சி கிராமத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் மாவட்ட வட்ட வழங்க அலுவலர் ரவிச்சந்திரன் பயனாளிகள் விண்ணப்பித்த மனுக்களை பரிசீலனை செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார்.



காரைக்குறிச்சி கிராமத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன.

அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீர் முகாம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்றது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராம சேவை மைய கட்டிடத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் செப்டம்பர் 10-ம் தேதியான இன்று நடைபெற்றது.

முகாமினை மாவட்ட வட்ட வழங்க அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது முகாமில் பயனாளிகள் விண்ணப்பித்த மனுக்களை பரிசீலனை செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார்.முகாமில் ஜெயங்கொண்டம் வட்ட வழங்க அலுவலர் ஜானகிராமன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், கிராம வருவாய் ஆய்வாளர் தமிழரசன் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட பொதுமக்கள் அளித்த நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil