பொற்பதிந்தநல்லூர் ஸ்ரீகாட்டுபிள்ளையார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

பொற்பதிந்தநல்லூர் ஸ்ரீகாட்டுபிள்ளையார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
X

கும்பாபிஷேக விழா.

பொற்பதிந்தநல்லூர் ஸ்ரீகாட்டுபிள்ளையார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காட்டு பிள்ளையார் ஆலயம் உள்ளது. இது சுமார் 97 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் யாகசாலை பூஜைகள் நேற்று முதல் தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று கட்டங்களாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆச்சாரியர்கள் மந்திரங்கள் முழங்க விமானக் கலசத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டு காட்டு பிள்ளையாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை காண சுற்றி உள்ள அர்த்தனேரி, சிலால், அணைக்குடம், கோடங்குடி, தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers