பொங்கல் பரிசுத்தொகுப்பு, மளிகைப்பொருட்களை அரியலூர் கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்முறை கிடங்கில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மளிகைப்பொருட்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரியலூர் மண்டலத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2,42,824 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு 12 வகையான மளிகை பொருட்கள், 1 கிலோ பொங்கல் அரிசி, வெல்லம், உப்பு ஆகியவைகள் துணி பையுடன் வழங்க உள்ளது.
மேற்காணும் பொருட்கள் அனைத்தும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து லாரிகள் மூலம் வந்து கொண்டு இருக்கிறது.
அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஜெயங்கொண்டம் வட்ட செயல்முறை கிடங்கிற்கு வரப்பெற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு மளிகை பொருட்களின் தரம், தயாரிப்பு தேதி மற்றும் பொருட்களின் காலாவதி தேதி ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும் அட்டியில் வெல்லம் மூட்டைகள் அதிக உயரத்திற்கு அடுக்க வேண்டாம் என அறிவுரை வழங்கினார். பரிசுத் தொகுப்பிற்கு 1 கிலோ அரிசி பேக்கிங் செய்வதை பார்வையிட்டு சரியான அளவில் நல்லமுறையில் பொருட்கள் பேக்கிங் செய்திட தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின்போது, மண்டல மேலாளர் எம்.பாலமுருகன், வட்டாட்சியர் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu