ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ராதிகா ஆய்வு
ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ராதிகா ஆய்வு
புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி சரக டிஐஜி ராதிகா ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் போலீஸ் நிலைய வழக்கு கோப்புகள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்கவும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தீவிர கண்காணிப்பில் இருக்க இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருச்சி சரக டிஐஜி ராதிகா அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் போலீஸ் நிலைய வழக்கு கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் ஜெயங்கொண்டம் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்கவும், மோட்டார் வாகன வழக்குகள் அதிகப்படியாக பதிவுசெய்யவும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி, இரும்புலிக்குறிச்சி, விக்ரமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலைய பகுதிகளில் குற்ற சம்பவங்களான மணல் கடத்தல், கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை, திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ்,போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயங்கொண்டம் சண்முகசுந்தரம், ஷகிராபானு, தா.பழூர் ஜெகதீசன், ஆண்டிமடம் குணசேகரன், உடையார்பாளையம் ரவிசக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், வெங்கடேஷ்பாபு, ரமேஷ் உடன் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு பணி நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்கள் ஆய்வுகள் குறித்து கேட்டபோது, அனைத்து வேலைகளும் சரியாக உள்ளதாகவும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள், சிறப்பாக செயல்படுவதாக திருச்சி சரக டிஐஜி ராதிகா கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu