ஜெயங்கொண்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, மாலை அணிவித்து, நூதனமுறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, மாலை அணிவித்து, நூதனமுறையில்  காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, மாலை அணிவித்து, நூதனமுறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜெயங்கொண்டம்- காங்கிரஸ் கட்சி சார்பில். பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும், மத்திய அரசை கண்டித்து கேஸ் சிலிண்டரை பாடை கட்டி, மாலை அணிவித்து, நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் .

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) முன்பாக, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உயர்வு மற்றும் மத்திய அரசை கண்டித்து சிலிண்டரை பாடை போல் கட்டி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதே போல் தா.பழூரில் வட்டாரத் தலைவர் முத்துசாமி தலைமையிலும், மீன்சுருட்டியில் வட்டார தலைவர்கள் அறிவழகன், செங்குட்டுவன் ஆகியோர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!