சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் மனோகரன்.(22). இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மனோகரன் அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபோன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளார். இதனிடையே சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, இதுபற்றி சிறுமியிடம் பெற்றோர்கள் கேட்டபோது நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுமதி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மனோகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags

Next Story
ai based agriculture in india