ஜெயங்கொண்டம் வட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம் வட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஜெயங்கொண்டம் வட்டார பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது.

Today Rain News in Tamil - ஜெயங்கொண்டம், மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Today Rain News in Tamil -அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உடையார்பாளையம், ஆண்டிமடம் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழைபெய்தது.

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில். அதிகாலையில் திரண்ட கருமேகங்களால் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் திடீரென இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இந்த மழை ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் ஆண்டிமடம் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழையாக பெய்தது.

அதேபோல் சிலால், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.அதிகாலை 5.30 மணியளவில் ஆரம்பித்த மழையானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஓடி ஏரி, குளம் குட்டைகளில் ஒடி நிரம்பியது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்