ஜெயங்கொண்டம்: கதண்டு கடித்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஜெயங்கொண்டம்: கதண்டு கடித்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
X

உத்திரக்குடி கிராமத்தில் வேலியில் இருந்த கதண்டு கடித்து 3பெண்கள் உட்பட 6பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



உத்திரக்குடி கிராமத்தில் வேலியில் இருந்த கதண்டு கடித்து 3 பெண்கள் உட்பட 6 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள, சிலால் உத்திரக்குடி கிராமத்தில், வயலில் தொழிலாளர்கள் கடலைச்செடி பிடுங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அருகே வேலியில் இருந்த கதண்டு கூட்டில் எதிர்பாராத விதமாக மண் விழந்துள்ளது. இதில் கதண்டு பறந்து, கடலைச் செடி பிடுங்கிக் கொண்டிருந்த சேகர், மல்லிகா, பாப்பா, பஞ்சான், ராஜாராம், ஜெகதம் ஆகியோர் என, 3 பெண்கள் உட்பட 6 பேரையும், கதண்டுகள் ஒன்றுகூடி ஓட ஓட துரத்தித் துரத்தி கொட்டின.

இதில் மயங்கி கிடந்தவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயலில் வேலை செய்தவர்களை, கதண்டுகள் துரத்தி கடித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!