ஜெயங்கொண்டம் பட்டா திருத்த முகாமில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

ஜெயங்கொண்டம் பட்டா திருத்த முகாமில் கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
X

ஜெயங்கொண்டத்தில் நடந்த பட்டா திருத்த முகாமில் க.சொ. கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்று பொதுமக்களுக்கு திருத்தப்பட்ட பட்டாக்களை வழங்கினார்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த பட்டா திருத்த முகாமில் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம், காரைக்குறிச்சி மற்றும் இருகையூர் கிராமங்களில் மாவட்ட வருவாய்த்துறை மூலமாக தமிழ் நிலம் பட்டா திருத்த முகாம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் பெ.ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் திருத்தப்பட்ட பட்டாக்களை பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், துணை வட்டாச்சியர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், இருகையூர் கிராம நிர்வாக அலுவலர் சந்துரு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!