வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா - 7 பேர் தலைமறைவு

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா  - 7 பேர் தலைமறைவு
X
தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்ப்டது. இதில்- 7 பேர் தலைமறைவுவாகினர்.

அரியலூர் மாவட்டம் அணைக்கரை அருகே தஞ்சாவூர் -விக்கிரவாண்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை பட்டேல் நிறுவனம் சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிளார்கள் 80 பேருக்கு கொரோனா பரிசோதனை சொய்யப்பட்டது.

இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இதில் 4 பேர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் மீத முள்ள 7 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்களை சுகாதார பணியாளர்கள் தேடிவருகின்றனர். மேலும் 14 நாட்கள் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அந்தநிறுவனம் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கிருமி நாசினி அடிக்கப்பட்டு ஊழியர்கள் யாரும்வெளியில் செல்லாமல் சுகாதார பணியை மேற்கொண்டுவருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!