பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் துணியை கட்டி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் துணியை கட்டி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
X

 அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் துணியை கட்டி நடத்தப்பட்ட  கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்புக் தெரிவிக்கும் இயக்கங்களை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாயில் துணியை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்ற பேரறிவாளன் நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பு மக்களும் வரவேற்ற நிலையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு கோஷம் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!