தா.பழூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

தா.பழூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தா.பழூர் ஒன்றியத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முதல்கட்டமாக 14 இடங்களில் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதில் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை செய்த நெல் மணிகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு