மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறல்:  போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
X
ஜெயங்கொண்டம் அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுமியிடம் தவறாக நடந்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் அப்பகுதியில் மன வளர்ச்சிக்கு குன்றிய 11-ஆம் வகுப்பு படித்த 15 வயது சிறுமி ஒருவரை சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து முதியவர் சுந்தரத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனவளர்ச்சிக்கு குன்றிய 15 வயது சிறுமியை 81 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்