கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கம்

கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி  வீரவணக்கம்
X
கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சிசார்பில் தா.பழூரில் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினர்

நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவ தினமான டிசம்பர் 25 ஆம் தேதி உயிர் நீத்த தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழவெண்மணி கிராமத்தில் உயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செல்வராஜ் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கொடியேற்றி பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்வராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக தங்கராசு வரவேற்று பேசினார். காமராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!