புதிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினார் அமைச்சர் சிவசங்கர்

புதிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினார் அமைச்சர் சிவசங்கர்
X

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியில் திறக்கப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றினார்.

இரும்புலிக்குறிச்சியில் புதிதாக திறக்கப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றினார்.


தமிழ்நாடு முதலமைச்சரல் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட, இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடத்தினை இன்று காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அந்த அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி சிறப்பித்து, அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர் லதா, மாவட்ட பதிவாளர்கள் உஷாராணி (நிர்வாகம்), தேன்மலர் (தணிக்கை), சார்பதிவாளர் முருகவேல், செயற்பொறியாளர் (பொ.ப.து) (கட்டடம்) ரவிச்சந்திரன், உதவிச்செயற்பொறியாளர் சரளா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!