தீபாவளியையாெட்டி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு புத்தாடைகள்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கல்

தீபாவளியையாெட்டி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு புத்தாடைகள்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கல்
X

அன்னை தெரசா பள்ளி வளாகத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளி வளாகத்தில், சினேகம் கிங்ஸ் லயன் சங்கம் சார்பில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 நபர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு புத்தாடை, பட்டாசுகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சினேகம் கிங்ஸ் லயன் சங்க சாசனத் தலைவர் சிவக்குமார், செயலாளர் சரவணகுமார், பொருளாளர் கலியராஜ், நிர்வாக அலுவலர் இரமேஷ் மற்றும் உறுப்பினர்கள், அரியலூர் எச்.ஐ.வி பாதித்தோர் நல சங்க மாவட்ட தலைவர் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்ணனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்