அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட 5பேர்.

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனைசெய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேரை ஜெயங்கொண்டம் தனிபிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்டவைகளை தடுக்கும் பொருட்டு ஜெயங்கொண்டம் தனிப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையில் தனிபிரிவு அமைத்தனர். அதன் அடிப்படையில் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரைச் சேர்ந்த கணேசன், அண்ணா நகரைச் சேர்ந்த சச்சின், நிஜந்தன், காமராஜர் நகரைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் இந்திரா காந்தி சாலையை சேர்ந்த ராஜா ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்த நிலையில், ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்