மணகெதி சுங்கச்சாவடியை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணகெதி சுங்கச்சாவடியை  மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் -ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் மணகெதி கிராமத்தில் உள்ள சுங்கசாவடியை நிரந்தரமாக மூடக்கோரி

நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


அரியலூர் மாவட்டம் மணகெதி சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் மணகெதி கிராமத்தில் உள்ள சுங்கசாவடியை நிரந்தரமாக மூடக்கோரி நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நீல,மகாலிங்கம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் த.ரத்தினவேல், குன்னம் தொகுதி தலைவர் மைக்கேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஜெயங்கொண்டம் தேசியசாலையில் உள்ள மணகெதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி அரசு விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 60கிலோமிட்டருக்குள் இரண்டு சுங்கச்சாவடிகள் உள்ளதால் மணகெதி சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்களும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story