ஆண் போல் லுங்கி, சட்டை அணிந்து பாட்டுபாடி அசத்திய நகராட்சி அலுவலர்

ஆண் போல் லுங்கி, சட்டை அணிந்து பாட்டுபாடி அசத்திய நகராட்சி அலுவலர்
X

ஆண்போல் லுங்கி சட்டைஅணிந்து பாட்டுபாடி அசத்திய நகராட்சிஅலுவலர் சரஸ்வதி


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் பாட்டு பாடி அசத்தினார் நகராட்சி அலுவலர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

இதில் போக்குவரத்து ஆய்வாளர் சாஹிரா பானு, நகராட்சி ஆணையர் சுபாஷினி, பொறியாளர், கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நகராட்சி வருவாய் அலுவலர் சரஸ்வதி பெண்கள் வாழ்வில் தடையின்றி முன்னேற தந்தை, கணவன் , சகோதரர் போன்ற ஆண்களும் காரணமாக உள்ளனர். ஆகையால் ஆண் போல் லுங்கி சட்டை அணிந்து வா புள்ள கருப்பாயி என்ற பாடல் போன்று முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் பெண்கள் எப்படி வாழ்வில் தங்களை பாதுகாத்துக் கொண்டு முன்னேற்றத்துடன் வாழ வேண்டும் என பாடல் அசத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!