2021 மிஸ்டர் தமிழ்நாடு போட்டி : சென்னை வாலிபர் சாம்பியன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்காண்டத்தில் நடந்த மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் உடல் திறன் காட்டிய வாலிபர்கள்.
2021 மிஸ்டர் தமிழ்நாடு போட்டி : மாநில அளவிலான 200 இளைஞர்கள் பங்கேற்பு
அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற 2021 மிஸ்டர் தமிழ்நாடு மாநில அளவிலான உடலமைப்பு திறன் போட்டியில் சென்னையை சேர்ந்த முனுசாமி முதலிடம் பிடித்து 50ஆயிரம் ரூபாய் மற்றும் சாம்பியன்கோப்பையை பெற்றார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாநில அளவிலான 2021 மிஸ்டர் தமிழ்நாடு உடலமைப்பு திறன் போட்டி , கோல்டன் ஸ்டார் ஜிம் உரிமையாளர் மணிவாசகன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த உடல் அமைப்பு திறன் போட்டியில் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தகதகவென மின்னிய கட்டுடலில் தங்களது ஆண்களின் வலுவலன புஜஅழகை காண்பித்த இளைஞர்கள், சிக்ஸ்பேக்கை காண்பித்து பாராட்டுக்களை பெற்றனர். இப்போட்டியில் சென்னையை சேர்ந்த முனுசாமி வெற்றிபெற்று முதல் பரிசான 50ஆயிரம் ரூபாய் மற்றும் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். இரண்டாம் பரிசான பத்தாயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீரமுலு பெற்றார்.
சிறப்பு விருந்தினராக சோழன் விளையாட்டுக்கழகம் சார்பில் கலந்து கொண்ட சோழன் க.குமார் வாண்டையார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu