ஜெயங்கொண்டம் நகரில் எதற்கும் துணிந்தவன் படம் இன்று முதல் திரையிடப்பட்டது
படத்தினை பார்க்க வந்திருந்த ரசிகர்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள சி.ஆர்.திரையரங்கில் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாமக, வன்னியர் சங்கம் மற்றும் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் சார்பாக சி.ஆர்.திரையரங்க உரிமையாளரிடம், படம் வெளியிட எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் சூரிய மன்னிப்பு கோரும் வரை அவர் நடித்த படத்தை திரையிடக்கூடாது என்று மனு அளித்தனர்.
இந்நிலையில் சூரியாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியும் ஜெயங்கொண்டம் நகரில் திரையிடப்படாமல் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், மற்றும் மாவீரன் மஞ்சள் படை உள்ளிட்ட அமைப்புகளிடம் திரையரங்க உரிமையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரசிகர்களின் வேண்டுகோள் குறித்து பேச்சுவார்த்தையில் கூறப்பட்டதையடுத்து, இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தியேட்டரில் படத்தைப் திரையிட அனுமதி அளித்தனர். இதனால் இன்று காலை முதல் எதற்கும் துணிந்தவன் படம் ஜெயங்கொண்டத்தில் உள்ள சி.ஆர். தியேட்டரில் திரையிடப்பட்டது. படம் திரையிடப்பட்டும் 700 இருக்கைகள் உள்ள திரையரங்கில் சுமார் 100 இருக்கைகளிள் மட்டுமே ரசிகர்கள் படத்தினை பார்த்து வருகின்றனர். திரையரங்கில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu