கல்லாத்தூரில் நடந்து சென்ற 2 இளைஞர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்

கல்லாத்தூரில் நடந்து சென்ற 2 இளைஞர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
X

பைல் படம்.

பலத்த காயமடைந்த விஷாலும், லேசான காயமடைந்த ராஜபிரகாஷ் ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மெயின் ரோடு தெருவைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் (37). இவர் ஆண்டிமடத்தில் இருந்து தனது வீட்டுற்கு வருவதற்காக கல்லாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். கல்லாத்தூர் மெயின் ரோட்டில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் ராஜபிரகாஷ் (20), ஆண்டிமடம் விளந்தை செல்லத்தெருவைச் சார்ந்த விஷால் (18) ஆகிய இரண்டு இளைஞர்களும் கல்லாத்தூர் மெயின் ரோட்டில் ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஞானப்பிரகாசம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற விஷால், ராஜபிரகாஷ் ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த விஷாலும், லேசான காயமடைந்த ராஜபிரகாஷ் ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து ஞானப்பிரகாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!