அரியலூரில் வருமுன் காப்போம் திட்ட முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

அரியலூரில் வருமுன் காப்போம் திட்ட முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் அடுத்த தென்னவநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

வட்டார தலைமை மருத்துவ அலுவலர் தட்சணாமூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, காது, மூக்கு,தொண்டை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

முகாமில், அங்கன்வாடி பணியாளர்கள், காய்கறிகள், பழங்கள், இயற்கை கீரை வகைகள், சிறுதானியங்கள் என பலவற்றையும் காட்சிபடுத்தினர். சித்தமருத்துவம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் தென்னவநல்லூர், வேம்புகுடி, அணைக்கரை, வடவார் தலைப்பு, குழவடையான், ஆயுதக்களம், தழுதாழை மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பலரும் சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!