வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைப்பு

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை எம்எல்ஏ  கண்ணன் துவக்கி வைப்பு
X

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.


வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், முத்தமிழ் அறிஞர் டாகடர் கலைஞரின் "வருமுன் காப்போம்" திட்ட மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோகசக்கரவர்த்தி வரவேற்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மருத்துவர் இளஞ்செழியன் நன்றியுரையாற்றினார்.

வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர்,ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், அலங்கார அண்ணை பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குவின், பங்கு தந்தை பெஞ்சமின் பிராங்கிலின், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture