பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
X

ஜெயங்கொண்டம் நகரில் பெரியார் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு திருஉருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பெரியார் 144வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு திருஉருவ சிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள அவரது முழு திருஉருவ சிலைக்கு நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,"சமுக நீதிநாள் உறுதிமொழி" எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் (வடக்கு) தன.சேகர், மாவட்ட துணைச் செயலாளர் மு.கணேசன், திராவிட கழகத்தின் முன்னாள் மண்டல தலைவர் காமராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

தா.பழூரில், தந்தை பெரியார் அவர்களின் 144- வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முழு திருவுருவ சிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் தி.மு.க, தி.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!