உடையார்பாளையம் பேருராட்சி வளர்ச்சிப் பணிகளை எம்எல்ஏ கண்ணன் ஆய்வு

உடையார்பாளையம் பேருராட்சி வளர்ச்சிப் பணிகளை எம்எல்ஏ கண்ணன் ஆய்வு
X

உடையார்பாளையம் பேரூராட்சி1-வது வார்டில் ரூ.7.50 மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணற்றை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

உடையார்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ கண்ணன் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தார்.

உடையார்பாளையம் பேரூராட்சியில் மூலதன மான்ய நிதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கிவைத்தார். இதனையடுத்து 1-வது வார்டில் ரூ.7.50 மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணற்றை துவக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

மேலும் உடையார்பாளையத்தில் உள்ள அரசு நூலகம், வேளாண் பொறியியல் அலுவலகம், ஆகியற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், அந்த அலுவலகங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

உடன் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பொறியாளர் சுப்பிரணியன், மின்துறை உதவி பொறியாளர் சுரேஷ், வேளாண் உதவி செயற்பொறியாளர் மு.இளவரசன், நூலகர் ஆர்.முருகானந்தம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

உடையார்பாளையம் பேரூராட்சி1-வது வார்டில் ரூ.7.50 மதிப்பீட்டில் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணற்றை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!