ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு
X

ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆய்வு.


ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ கண்ணன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரில், மேலகுடியிருப்பில் முதலைமைச்சரின் மாணவ, மாணவிகள் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும், சமையல் கூடம் கட்டிட பணி, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கீழக்குடியிருப்பு புது ஏரி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மலங்கன்குடியிருப்பு ஆலடி ஏரி மேம்பாடு செய்யும் பணி, காமராஜபுரத்தில் நடைபெற்று வரும், தேசிய நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் நகராட்சித் தலைவர் சுமதி சிவக்குமார், துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!