ஜெயங்கொண்டத்தில் புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணி எம்எல்ஏ ஆய்வு

ஜெயங்கொண்டத்தில் புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணி எம்எல்ஏ ஆய்வு
X

ஜெயங்கொண்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை எம்எல்ஏ கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டம் புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணியினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளையடுத்து ஜெயங்கொண்டம் பேரூந்து நிலையத்தில்,புதிய பேரூந்து நிலைய கட்டுமானப் பணிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார். மேலும் தற்போது பேரூந்துகள் இயங்குவதற்கு இடையூறு இல்லாமல் இயங்கவும், கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்கவும், ஆலோசனைகள் வழங்கினார்.

வட்டாட்சியர் ஆனந்த்,நகராட்சி ஆணையர் வ.சுபாஷினி,அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் குணசேகரன்,நகராட்சி பொறியாளர் சித்ரா,பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture