புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ

புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட எம்எல்ஏ கண்ணன்.

New Anganwadi Center 9 லட்சம் மதிப்பீட்டிலான மூன்று சிறிய புதிய பாலங்கள் கட்டுவதற்கான பணியினை, எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஒன்றியம், வங்குடி ஊராட்சி, வங்குடி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10.93 லட்சம் மதிப்பீட்டிலான புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ.பிரபாகரன், ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

New Anganwadi Center

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, உடையார்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 11,14,15 ஆகிய இடங்களில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.00 லட்சம் மதிப்பீட்டிலான மூன்று சிறிய புதிய பாலங்கள் கட்டுவதற்கான பணியினை, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், செயல் அலுவலர் கோமதி, துணைத்தலைவர் அக்பர் அலி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், இலக்கியா பிரபு, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!