அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எம்.எல்.ஏ.
உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 94 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.
School Cycle -ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம் பேரூராட்சியில், உடையார்பாளையம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 136 மாணவர்களுக்கு மிதிவண்டிகளையும், உடையார்பாளையம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 94 மாணவிகளுக்கு மிதிவண்டிகளையும், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி, உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் பா.கோபாலகிருஷ்ணன்,தலைமை ஆசிரியர்(ஆண்கள்) இள.தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர் (பெண்கள்) கங்காதேவி, மேலாண்மை குழு தலைவர் ரஞ்சித் குமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் சதாசிவம், சேப்பெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் ராமசாமி, செயலாளர் சக்கரவர்த்தி , நகர துணைச் செயலாளர் ராயர், மாவட்ட பிரதிநிதி தங்கராசு, நகர கழக அவைத் தலைவர் ஜெகநாதன் , நகர பொருளாளர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எம்.ஷாஜகான் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சசிகுமார், செல்வராஜ் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu