புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
X

சிந்தாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்.




தா.பழூர் ஒன்றியத்தில் புதிய பள்ளி கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சிந்தாமணி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15.47 லட்சம் மதிப்பீட்டில் 30 மாணவர்கள் அமரக்கூடிய புதிய கட்டிடமும், காரைக்குறிச்சி ஊராட்சி அருள்மொழி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 10 லட்சம் மதிப்பீட்டில் 54 மாணவர்கள் அமரக்கூடிய அங்கன்வாடி கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், குணசேகரன், சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் மாலதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம், அருள்மொழி கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil