ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் -அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
![ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் -அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் -அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்](https://www.nativenews.in/h-upload/2021/06/16/1102251-min-1.webp)
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சுகாதார நிலையத்தில் நடைபெறும் வருவனா தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்து மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவி வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது :
தமிழகத்தில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். எனவே, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் உள்ளிட்ட எந்த ஒரு மாவட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது. அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சித்த மருத்துவத்தின் படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் நோய் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது எனினும் ஒரு சில கிராமங்களில் உரிய விழிப்புணர்வு இல்லாததால் நோய்த்தொற்று சிறிது அதிகரித்து வருகிறது அக்கிராமங்களை கண்டறிந்து கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்துவதற்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu