த.பழூரில் தண்ணீர் பந்தல்: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

த.பழூரில் தண்ணீர் பந்தல்: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்
X

தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில்,  கோடை கால தண்ணீர் பந்தல்களை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.


தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் கோடை காலதண்ணீர் பந்தல்களை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, இருகையூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டியால், பாண்டி பஜார், கூழாட்டுக்குப்பம் ஆகிய ஊர்களில் கோடை கால தண்ணீர் பந்தல்களை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தலைமையில், அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.சூசைராஜ், எஸ்.ஆர்.தமிழ்செல்வன்,த.நாகராஜன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கோவி.சீனிவாசன், இரா.சங்கர், சி.கண்ணதாசன், கே.எஸ்.ஆர். கார்த்திக், தொமுச செல்வம், நளராசன் மற்றும் கிளை கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது