ஜெயங்கொண்டத்தில் புதிய பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
ஜெயங்கொண்டத்தில் புதிய பணிகளுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் தா.பழூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9 கோடி 51 இலட்சம் மதிப்பீடடில் 9 புதிய பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 8 வார்டுகளில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் 3.555 கி.மீ நீளமுள்ள 28 மண் சாலைகளை பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்தவும், 15-வது மத்திய நிதிக்குழு மூலம் வார்டு எண்.14-ல் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 3.50 எக்டேர் பரப்பளவு கொண்ட கொக்கனேரியை மேம்பாடு செய்தல் பணியினையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பாபாங்குளத்தில் வார்டு எண்.5-ல் ரூ.42.30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக பூங்கா அமைக்கும் பணியினையும், மூலதன மானிய நிதி மற்றும் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி குழுமம் மூலம் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.40.52 இலட்சம் மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம் சாலை முதல் மூர்த்தியான் வரையிலான 2.50 கி.மீ நீளமுள்ள சாலை பணிகளையும், ரூ.24.78 இலட்சம் மதிப்பீட்டில் உதயநத்தம்-ஆயுதகளம் சாலை பணிகளையும், ரூ.30.27 இலட்சம் மதிப்பீட்டில் தா.பழூர்-சீனிவாசபுரம் சாலை பணிகளையும் தொடங்கி வைத்தார்
மேலும், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தினையும், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு கட்டுமானப்பணிகளையும் என மொத்தம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9 கோடியே 51 இலட்சம் மதிப்பிலான புதிய தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் அமர்நாத், நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகராட்சிப் பொறியாளர் சித்ரா, வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu